Thursday, June 24, 2010

சில நேரங்களில்..

சில நேரங்களில்.. நான் உன்னிடம் 
பேச முடியாமல் போயிருக்கலாம்...!!!

சில நேரங்களில்.. உன் செய்திகளுக்கு 
பதில் சொல்ல மறந்திருக்கலாம்...!!!

சில நேரங்களில்.. என்னுடைய செய்தி 
உனக்கு கிடைக்காமல் போயிருக்கலாம்...!!!

ஆனால் இதற்கெல்லாம் அர்த்தம் நான் 
உன்னை மறந்துவிட்டேன் என்றல்ல..!

என்னை நீ நினைத்துகொள்ள 
நான் கொடுக்கும் இடைவேளை.....!!!!

--பழநிசாமி.தி

Wednesday, June 16, 2010

நான் ...!!!

எல்லா மனுசங்களும் ஒரே குணத்துல இருக்கிறதில்லை... கை ரேகை மட்டும் எல்லோருக்கும் வேறுபாடு இல்லை அவர்களின் குணமும்தான்.. 
நீ ஏன் உன்னை போல நான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாய்.. உன்னை போல நான் இருந்து விட்டால் அப்புறம் நான் யார்..
எனகென்ன தனித்தன்மை இருக்கிறது அது நல்லதோ கேட்டதோ.. நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்...

நானும் இப்படித்தான் உன்னுடைய எண்ணங்களுக்கு மதிப்பு கொடுக்க விரும்பறேன் என்னால் முடிந்தவரை.....
எனக்காக நீ மாற வேண்டாம்... ஆனால் நாம் இருவருமே சகிப்பு தன்மை கொண்டவராக மாற வேண்டும். 

என் கனவுகள்..!!!

கலங்காதே!  கலங்குவேன்..! 
கலைந்துவிடும் ...
சிரிக்காதே!  சிரித்துவிடுவேன்..!
சிதறிவிடும் ....
என் கனவுகள்..!!!

--பழநிசாமி.தி

சந்தோஷமாகதான் இருக்கிறேன் !!!!

மழை பேயும்போது  மண் வாசனை தேடி 
ஏமாறும் நேரம் தவிர மற்ற நேரங்களில் 
சந்தோஷமாகதான் இருக்கிறேன் !!!! 

பச்சை புல்வெளியிலும் 
பசுமையான வயல் வரப்புகளிலும் 
நடந்து திரிந்தது நினைத்து பார்த்து 
சந்தோஷமாகதான் இருக்கிறேன் !!!! 

அம்மாவின் பாசமும்  அப்பாவின் நட்பும் 
துணைவியின் காதலும்.. என் குழந்தைகளின் மழலையும் 
அனுபவித்த காலங்களை நினைத்து 
சந்தோஷமாகதான் இருக்கிறேன் !!!! 

மக்களெல்லாம் ஊமையாய் நடந்து செல்ல 
அவர்களுடன் ஊமையாய் - நானும் 
மனசுக்குள்ளே என் தஞ்சை மக்களை  நினைத்து 
சந்தோஷமாகதான் இருக்கிறேன் !!!! 

எழுதிக்கொண்டே போகலாம் 
எழுத்துகளை உணர்வாய் பார்க்கும் 
என் மக்களை நினைக்கும்போதெல்லாம் 
சந்தோஷமாகதான் இருக்கிறேன் !!!! 

என்னை போல எத்தனை உள்ளங்கள் இங்கே வாடுகிறதோ
எனக்காவது தமிழே நீ இருக்கிறாய் என் புலம்பல் கேட்க 
அதுபோதும் நான் சந்தோசமாய்  இருக்க .. 

ஆம் 
நான் சந்தோஷமாகதான் இருக்கிறேன் !!!! 


--பழநிசாமி.தி

இறைவனுக்கு நன்றி

அடுத்த வேளை சோற்றுக்கு உத்தரவாமில்லாமல் எத்தனையோ குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி கொடுக்க முடியாமலிருக்கிற இந்த தேசத்தில் அந்தக் குறை இல்லாமல் ஒரளவு பொருளாதர வசதியை ஏற்படுத்திக் கொடுத்த இறைவனுக்கு நன்றி.

சாதனைகள்..

சாதனைகள்.. மனிதனுக்கு மனிதன்.. இடத்துக்கு இடம் அதன் அளவுகோல் வேறுபட்டுகொண்டே இருக்கிறது.
ஆனால், எல்லாமே பொருளாதாரத்தை சார்ந்ததாகவே இருக்கிறது. என்னை பொறுத்தவரை பெற்றோரின் மகிழ்ச்சியிலும் , பிள்ளைகளின் சிரிப்பிலும் , மனைவியின் அன்பிலும் என் சாதனைகளை காண விரும்ப்புகிறேன். சக மனிதர்களை நேசிக்க விரும்புகிறேன்.. அதுவே எனக்கு பெரிய சாதனை. 

Thursday, February 11, 2010

என்னை பற்றி......

இந்த பதிவுகள் அனைத்தும் எனக்காக .. எனக்கு நான் நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள்ள.. அறிவுரை சொல்ல ரொம்ப ஆசை. ஆனால் அதுக்கு நான் தகுதியானவன் இல்லை.. இங்கே இருக்கிற நிறைய விஷயங்கள் நான் சொன்னது இல்லை.. படித்ததில் பிடித்தது..


ஆரம்பத்தில்.. எனக்கு blogs படிக்கவே பிடிக்காது.  காரணம் பெருசா ஒன்னும் இல்லை.. என்னவோ அவங்க சொந்த கதை எழுதி இருகிறத நாம படிக்கிற மாதிரி தோணும். ஆனால் சில blogger ரொம்ப நிறைய நல்ல விசயங்கள பத்தி பேசி இருந்தாங்க. இப்போ நான் ஒரு 10 blogs தொடற்சியா படிக்கிறேன்.
என்னை பற்றி சொல்லனும்ல.. 

சாதாரண மனுஷன் நான்.. அறிவாளியும் இல்ல முட்டாளும் இல்ல. 
சாதிக்க பிறந்தவன் எல்லாம் இல்லங்க.. சாதாரண வாழ்க்கை வாழறதுக்காக போராடுற மனுஷன்.மற்றபடி சந்தர்ப்பங்கள் மட்டுமே ஒரு மனுசனோட நல்ல/கெட்ட குணங்களை வெளிபடுத்தும்.. எனக்கு இதுவரை அமைந்த சந்தர்பங்களும், மக்களும், நண்பர்களும் ,நிகழ்வுகளும் அனைத்துமே நல்லவையாக இருந்துவிட்டது. என்னை நான் நல்லவனா கெட்டவனா என்று பரிட்சித்து பார்க்க எல்லாம் எனக்கு ஆசை இல்லை.. இனிமேலும்.. எனக்கு அமையும் அணைத்து சந்தர்பங்களும் நிகழ்வுகளும்.. நல்லவையாகவே இருக்க விரும்புகிறேன்..
Software Engineer. Working in singapore. Native place Thanjavur India..


--பழநிசாமி.தி